UN Women Sri Lanka unveils SamaTheevu – an island where equality thrives
06 March 2025

Colombo, Sri Lanka (6 March 2025): This morning, UN Women Sri Lanka opened සමதீவு (SamaTheevu), a public installation that brings to life a vision of a gender equal world – a goal that remains urgent and achievable with collective action.
The launch of සමதீவு aligns with International Women’s Day and the 30th anniversary of the Beijing Declaration and Platform for Action – recognized as the most comprehensive and visionary blueprint for achieving gender equality and advancing women’s rights.
Sri Lanka has long demonstrated its commitment to gender equality. In 1981 Sri Lanka ratified the Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) reinforcing its commitment to protecting the rights of women and girls. Building on this, in 1995, Sri Lanka joined 189 other countries in adopting the Beijing Declaration and Platform for Action at the Fourth World Conference on Women.
Despite some progress, women’s labour force participation in Sri Lanka has stagnated and regressed between 2020 and 2025. The proportion of women in parliament has remained below 10% in the 77 years since Sri Lanka’s independence and 24% of women have experienced physical or sexual violence by their intimate partner. In 2006, Sri Lanka took 13th place in closing the gender gap, whereas in 2024, it stood at 122nd place.
Speaking on this at the launch event, Hon. Dr. Namal Sudarshana, Deputy Minister of Women and Child Affairs stated that: “While progress has been made since 1995, we know that the status of Sri Lankan women has stagnated against several indicators on gender equality, owing to multiple crises. The 30th anniversary of the Beijing Declaration this year, is a pivotal moment, and the Ministry of Women and Child Affairs remains committed to protecting the rights of women and advancing gender equality in the country”.
Emphasizing on collective action to accelerate progress on gender equality, Marc-André Franche, Resident Coordinator of the UN in Sri Lanka highlighted: “As Sri Lanka’s obligations under the Convention on the Elimination of All Forms of Discrimination Against Women were recently reviewed, this is a pivotal moment for the country to assess progress, identify gaps, and most importantly accelerate actions to meet its commitments on gender equality and women’s empowerment. The UN in Sri Lanka remains committed to supporting Sri Lanka in this journey”.
The interactive installation offers visitors a glimpse into an island where everyone, regardless of gender has equal rights and opportunities in all aspects of life. It serves as a powerful reminder that gender equality is not only a fundamental human right but also a driver of social and economic progress. It also serves as a rallying call for all sectors of society to contribute to a future where every individual can thrive without discrimination.
As Sri Lankan women activists were a key part of shaping the Beijing Declaration and Platform for Action, Emeritus Professor of Law, Savitri Goonesekere who attended the Beijing Conference in 1995 said: “Celebrating 30 years since the adoption of the Beijing Platform for Action is surely a time to reflect on past developments relating to gender equality and to address new realities - including the challenges of IT, cybercrimes, and AI - in formulating a new path to eliminate discrimination against women. The reality of discrimination and denial of life chances in our country and community requires activists and women’s groups to also understand past developments, trends, failures, gaps, and limitations as they formulate new interventions to realize gender equality.”
“At UN Women, our goal is to uphold human rights and sustainable development for all”, said Ramaaya Salgado, Head of Office at UN Women Sri Lanka. “Global data shows us that societies where everyone - regardless of gender - is equally valued, given equal opportunities, and supported by just institutions - will flourish, and achieving these goals requires collective efforts”.
SamaTheevu serves as a rallying call to inspire action to advance women’s rights and gender equality by challenging all forms of violence, discrimination and exploitation; while fostering empowerment to ensure inclusive access to education, employment, leadership, and decision-making spaces.
The installation is open to the public from 6th – 12th March from 9:00am – 8:00pm at the Lionel Wendt, Art Centre, Colombo 07.
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාවේ එක්සත් ජාතීන්ගේ කාන්තා ඒකකය, සමානාත්මතාව සපිරි දිවයිනක ස්ථාපන නිර්මාණයක් වන සමතීවු එළිදක්වයි.
කොළඹ, ශ්රී ලංකාව (2025 මාර්තු 6): සමාජභාවී සමානාත්මතාව සහ කාන්තාවන් සවිබල ගැන්වීම සඳහා වූ එක්සත් ජාතීන්ගේ ආයතනයේ (UN Women) ශ්රී ලංකා ඒකකය විසින් සමාජභාවී සමානාත්මතාව සපිරි ලෝකයක් පිළිබඳ දැක්මක් සජීවී කරන පොදු ස්ථාපනයක් වන සමතීවු (SamaTheevu) නිර්මාණය අද උදෑසන දියත් කරන ලදි. සාමූහික ක්රියාමාර්ග තුළින් සාක්ෂාත් කරගත හැකි මෙම අත්යවශ්ය අරමුණ කරා ළඟාවීමට දිරිගැන්වීම එහි අරමුණයි.
‘සමතීවු’එළිදැක්වීම ජාත්යන්තර කාන්තා දිනය හා බීජිං ප්රකාශනයේ සහ ක්රියාකාරී වේදිකාවේ 30 වැනි සංවත්සරයට සමගාමීව සිදු කෙරේ. සමාජභාවී සමානාත්මතාව සාක්ෂාත් කර ගැනීම සහ කාන්තා අයිතිවාසිකම් ඉදිරියට ගෙන යාම සඳහා වන මෙතෙක් ඉදිරිපත් කරන ලද වඩාත් පරිපූර්ණ හා දූරදර්ශී සැලැස්ම වන්නේ බීජිං ප්රකාශනයයි.
ශ්රී ලංකාව දිගු කලක් තිස්සේ සමාජභාවී සමානාත්මතාව සඳහා තම කැපවීම පෙන්නුම් කර ඇති රටකි. කාන්තාවන්ගේ සහ ගැහැණු ළමයින්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සඳහා තම කැපවීම ශක්තිමත් කරමින් 1981දී ශ්රී ලංකාව කාන්තාවන්ට එරෙහි සියලු ආකාරයේ වෙනස්කම් කිරීම් තුරන් කිරීමේ සම්මුතිය (CEDAW) අනුමත කළේය. මේ මත පදනම්ව, 1995දී, කාන්තාවන් පිළිබඳ සිව්වන ලෝක සමුළුවේදී බීජිං ප්රකාශනය සහ ක්රියාකාරී වේදිකාව සම්මත කර ගැනීම සඳහා ශ්රී ලංකාව තවත් රටවල් 189 ක් සමඟ එක් විය.
යම් ප්රගතියක් තිබුණද, ශ්රී ලංකාවේ ශ්රම බලකායේ කාන්තා සහභාගීත්වය 2020 සහ 2025 අතර කාලයේදී පසුබෑමකට ලක්ව ඇත. ශ්රී ලංකාව නිදහස ලබා වසර 77ක් ගතවී ඇතත්, පාර්ලිමේන්තුවේ කාන්තා නියෝජනය 10%ට වඩා අඩුය. කාන්තාවන්ගෙන් 24%ක් තම සමීප සහකරු වෙතින් ශාරීරික හෝ ලිංගික හිංසනයට මුහුණ දී ඇත. 2006දී, සමාජභාවී පරතරය අඩු කිරීම සම්බන්ධයෙන් ශ්රී ලංකාව 13වන ස්ථානයේ සිටි අතර, 2024 දී එය 122 වන ස්ථානයට පත් විය.
මෙම උත්සවයේදී මේ පිළිබඳව අදහස් දක්වමින් කාන්තා හා ළමා කටයුතු නියෝජ්ය අමාත්ය ගරු නාමල් සුදර්ශන මහතා මෙසේ පැවසීය: “1995 සිට ප්රගතියක් ලබා ඇතත්, බහුවිධ අර්බුද හේතුවෙන්, සමාජභාවී සමානාත්මතාව පිළිබඳ දර්ශක කීපයකම ශ්රී ලාංකික කාන්තාවන්ගේ තත්ත්වය ප්රගතියක් ලබා නැති බව අපි දනිමු. මෙම වසරට යෙදෙන බීජිං ප්රකාශනයේ 30වන සංවත්සරය තීරණාත්මක අවස්ථාවක් වන අතර, කාන්තා හා ළමා කටයුතු අමාත්යාංශය කාන්තාවන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීමට සහ රට තුළ සමාජභාවී සමානාත්මතාව ඉදිරියට ගෙන යාමට කැපවී සිටී”.
සමාජභාවී සමානාත්මතාව පිළිබඳ ප්රගතිය වේගවත් කිරීම සඳහා සාමූහික ක්රියාමාර්ගවල අවශ්යතාව අවධාරණය කරමින්, එක්සත් ජාතීන්ගේ ශ්රී ලංකා නේවාසික සම්බන්ධීකාරක මාර්ක්-ආන්ඩ්රේ ෆ්රාන්ෂ් මෙසේ අවධාරණය කළේය: “කාන්තාවන්ට එරෙහි සියලු ආකාරයේ වෙනස්කම් තුරන් කිරීමේ සම්මුතිය යටතේ ශ්රී ලංකාවේ බැඳීම් මෑතකදී සමාලෝචනය කරන ලදි. මෙම අවස්ථාව සමාජභාවී සමානාත්මතාව සහ කාන්තා සවිබල ගැන්වීම පිළිබඳ ශ්රී ලංකාවේ ප්රගතිය තක්සේරු කිරීමටත්, අඩුපාඩු හඳුනා ගැනීමටත් ඒ සඳහා රටක් වශයෙන් ඇති කැපවීම් සපුරාලීම සඳහා ගන්නා ක්රියාමාර්ග වේගවත් කිරීමටත් රටට ඇති තීරණාත්මක මොහොතකි. ශ්රී ලංකාවේ එක්සත් ජාතීන්ගේ සංවිධානය මෙම ගමනේදී ශ්රී ලංකාවට සහාය දීමට කැපවී සිටී”.
සමාජභාවී භේදයකින් තොරව සෑම කෙනෙකුටම ජීවිතයේ සෑම අංශයකම සමාන අයිතිවාසිකම් සහ අවස්ථා ඇති දිවයිනක් පිළිබඳ දර්ශනයක් මෙම ස්ථාපන නිර්මාණය මඟින් නරඹන්නන්ට ලබා දේ. සමාජභාවී
සමානාත්මතාව මූලික මානව අයිතිවාසිකමක් පමණක් නොව සමාජීය හා ආර්ථික ප්රගතියේ හේතුකාරකයක්ද වන බව අවබෝධ කර දීම එහි අරමුණයි. සෑම පුද්ගලයෙකුටම වෙනස්කම් කිරීම්වලට ලක් නොවී සමෘද්ධිමත් විය හැකි අනාගතයක් නිර්මාණය කර ගැනීමට සමාජයේ සියලු අංශ පෙළඹවීම ද මෙමගින් තව දුරටත් අපේක්ෂා කෙරේ.
බීජිං ප්රකාශනය සහ ක්රියාකාරී වේදිකාව හැඩගැස්වීමේදී ශ්රී ලාංකික කාන්තා ක්රියාකාරීහු ප්රධාන වැඩ කොටසක් ඉටු කළහ. 1995 දී බීජිං සමුළුවට සහභාගී වූ කාන්තා ක්රියාකාරිනියක වන නීති මහාචාර්ය සාවිත්රි ගුණසේකර මහත්මිය මෙසේ පැවසුවාය: “බීජිං ක්රියාකාරී වේදිකාවේ සමාරම්භයට වසර 30 සපිරෙන මෙම මොහොත නිසැකවම සමාජභාවී සමානාත්මතාවට අදාළ අතීත වර්ධනයන් ගැන මෙනෙහි කිරීමට සහ තොරතුරු තාක්ෂණ, සයිබර් අපරාධ හා AI හි අභියෝග ඇතුළු නව යථාර්ථයන්ට මුහුණ දීම සඳහා සූදානම් වීමට හොඳ අවස්ථාවකි. මේවා මුල් කරගෙන, සමානාත්මතාව සාක්ෂාත් කර ගැනීම සහ කාන්තාවන්ට එරෙහි වෙනස්කම් කිරීම තුරන් කිරීම සඳහා ගත යුතු ඉදිරි පියවර සම්පාදනය කිරීමට ද කාලය එළැඹ ඇත. අපගේ රටවල සහ ප්රජාවන්හි සිදුවන වෙනස් කොට සැලකීමේ සහ ජීවිත අවස්ථා ප්රතික්ෂේප කිරීමේ යථාර්ථය හේතුවෙන්, ක්රියාකාරීන් සහ කාන්තා කණ්ඩායම් ස්ත්රී පුරුෂ සමානාත්මතාවය සාක්ෂාත් කර ගැනීම සඳහා නව මැදිහත්වීම් සකස් කරන විට අතීත වර්ධනයන් සහ ප්රවණතා, අසාර්ථකත්වයන්, අඩුපාඩු සහ සීමාවන් ද තේරුම් ගැනීම අවශ්ය වේ”.
එක්සත් ජාතීන්ගේ කාන්තා ඒකකයේ ඉලක්කය වන්නේ සැමට මානව හිමිකම් සහ තිරසාර සංවර්ධනය තහවුරු කිරීම බව එක්සත් ජාතීන්ගේ ශ්රී ලංකා කාන්තා කාර්යාලයේ ප්රධානී රමායා සල්ගාදු පැවසුවාය. “ගෝලීය දත්ත අපට පෙන්වා දෙන්නේ, සමාජභාවී භේදයකින් තොරව සියලු දෙනා සමානව අගය කරනු ලබන, සමාන අවස්ථා ලබා දෙන, සාධාරණ ආයතනවල සහාය ලැබෙන සමාජයන් සමෘද්ධිමත් වන බවයි. මෙම අරමුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා සාමූහික උත්සාහයන් අවශ්යය”.
සියලු ආකාරයේ ප්රචණ්ඩත්වයට, වෙනස්කම්වලට සහ සූරාකෑමට අභියෝග කරමින් කාන්තා අයිතිවාසිකම් සහ සමාජභාවී සමානාත්මතාව ඉදිරියට ගෙන යාම සඳහා ක්රියාමාර්ග දිරිමත් කිරීම සමතීවු ස්ථාපනයේ බලාපොරොත්තුව වේ. අධ්යාපනය, රැකියාව, නායකත්වය සහ තීරණ ගැනීමේ අවකාශයන් සඳහා සියල්ලන් ඇතුළත් කරගන්නා ප්රවේශය සහතික කිරීම සඳහා බලගැන්වීම එමගින් දිරිගන්වනු ලැබේ.
මෙම ස්ථාපනය මාර්තු 6 සිට 12 දක්වා පෙ.ව. 9:00 සිට ප.ව. 8:00 දක්වා කොළඹ 07, ලයනල් වෙන්ඩ්ට් කලා මධ්යස්ථානයේදී මහජනතාව සඳහා විවෘතව පවතී.
ஊடக வெளியீடு
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் (ஐ.நா.) பெண்கள் அமைப்பானது சமத்துவம் விருத்தியடைந்துள்ள தீவான සමதீவினை (சமதீவு) அறிமுகப்படுத்துகிறது
கொழும்பு, இலங்கை (மார்ச் 6, 2025): இன்று காலை, இலங்கை ஐ.நா. பெண்கள் அமைப்பானது கூட்டு நடவடிக்கையின் மூலமாக அவசரமானதும் அடையவேண்டியதுமான இலக்காக உள்ள பால்நிலை சமத்துவமான உலகம் எனும் தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பாக்குகின்ற සමதீவு (சமதீவு) என்ற பொது நிறுவலை வெளியிட்டது.
සමதீவு வெளியீடு சர்வதேச மகளிர் தினம் மற்றும் பால்நிலை சமத்துவத்தை அடைவதற்கும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் மிகவும் விரிவான மற்றும் தொலைநோக்குடைய வரைபடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயற்பாட்டிற்கான தளத்தின் 30வது ஆண்டு நிறைவுடன் ஒத்துப்போகிறது.
இலங்கை பால்நிலை சமத்துவத்திற்கான தனது உறுதிப்பாட்டை நீண்ட காலமாக நிரூபித்துள்ளது. 1981 ஆம் ஆண்டில், இலங்கை பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான ஒப்பந்தத்தை (CEDAW) அங்கீகரித்தது. இதன் அடிப்படையில், 1995 ஆம் ஆண்டில், பெண்கள் தொடர்பான நான்காவது உலக மாநாட்டில் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயற்பாட்டு தளத்தை ஏற்றுக்கொள்வதில் இலங்கை 189 நாடுகளுடன் இணைந்தது.
சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், 2020 மற்றும் 2025 க்கு இடையில் இலங்கையில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பானது தேக்கமடைந்து பின்தங்கியுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து 77 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் பெண்களின் விகிதம் 10% க்கும் குறைவாகவே உள்ளதுடன், 24% பெண்கள் தங்களது நெருங்கிய துணையால் உடலியல் அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டில், பால்நிலை இடைவெளியைக் குறைப்பதில் இலங்கை 13 வது இடத்தைப் பிடித்த அதே நேரத்தில் 2024 இல் அது 122 வது இடத்தில் இருந்தது.
வெளியீட்டு நிகழ்வில் இது குறித்துப் பேசிய மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சரான கௌரவ. Dr. நாமல் சுதர்ஷன அவர்கள் கூறுகையில், “1995 முதல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், பல நெருக்கடிகள் காரணமாக, பால்நிலை சமத்துவம் குறித்த பல குறிகாட்டிகளுக்கு எதிராக இலங்கைப் பெண்களின் நிலை தேக்கமடைந்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்த ஆண்டு பெய்ஜிங் பிரகடனத்தின்
30வது ஆண்டு நிறைவானது ஒரு முக்கிய தருணம் என்பதுடன், நாட்டில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பால்நிலை சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு உறுதிபூண்டுள்ளது” என்றார்.
பால்நிலை சமத்துவத்தில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான கூட்டு நடவடிக்கையை வலியுறுத்திய இலங்கையில் உள்ள ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரான மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பின்வருமாறு குறிப்பிட்டார்: “பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் கடப்பாடுகள் சமீபத்தில் மீளாய்வு செய்யப்பட்டதால், இது நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், இடைவெளிகளைக் கண்டறிவதற்கும், மிக முக்கியமாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் குறித்த அதனது அர்ப்பணிப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் ஓர் முக்கியமான தருணமாகும். இந்தப் பயணத்தில் இலங்கையை ஆதரிப்பதில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக உள்ளது” என்றார்.
இந்த ஊடாடும் நிறுவலானது பார்வையாளர்களுக்கு பால்நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை கொண்டுள்ள ஒரு தீவைப் பற்றிய பார்வையை வழங்குகிறது. இது பால்நிலை சமத்துவம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை மட்டுமல்லாது, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான உந்துசக்தியாகும் என்பதற்கான ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயற்படுகிறது. இது ஒவ்வொரு தனிநபரும் பாகுபாடு இல்லாமல் செழித்து வளரக்கூடிய எதிர்காலத்திற்கு பங்களிக்க சமூகத்தின் அனைத்து துறைகளுக்குமான ஓர் அணிதிரட்டும் அழைப்பாகவும் செயற்படுகிறது.
பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயற்பாட்டிற்கான தளத்தை வடிவமைப்பதில் இலங்கை பெண் ஆர்வலர்கள் முக்கிய பங்காற்றியதால், 1995 இல் பெய்ஜிங் மாநாட்டில் கலந்து கொண்ட எமரிட்டஸ் சட்டப் பேராசிரியரான சாவித்ரி குணசேகரே கூறுகையில்: "பெய்ஜிங் செயற்பாட்டுத் தளத்தை ஏற்றுக்கொண்டதன் 30 ஆண்டுகளைக் கொண்டாடுவதென்பது, நிச்சயமாக பால்நிலை சமத்துவம் தொடர்பான கடந்த கால முன்னேற்றங்களைப் பற்றி சிந்திப்பதற்கும், தகவல் தொழில்நுட்பம், இணையவழி குற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்வதுடன் சமத்துவத்தை அடைவதற்கும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்குமான ஓர் புதிய பாதை மற்றும் முன்னோக்கி செல்லும் வழியை உருவாக்குவதற்குமான ஒரு நேரமாகும். நமது நாடுகளிலும் சமூகங்களிலும் பாகுபாடு மற்றும் வாழ்க்கை வாய்ப்புகள் மறுக்கப்படுவதன் யதார்த்தமானது, பால்நிலை சமத்துவத்தை உணர்வதற்காக புதிய தலையீடுகளை உருவாக்கும்போது, ஆர்வலர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் கடந்த கால முன்னேற்றங்கள் மற்றும் போக்குகள், தோல்விகள், இடைவெளிகள் மற்றும் வரம்புகளைப் புரிந்து கொள்வது அவசியமாகும்” என்றார்.
அனைவருக்கும் மனித உரிமைகள் மற்றும் நிலைபேண்தகு அபிவிருத்தியை நிலைநிறுத்துவதே ஐ.நா. இன் பெண்கள் அமைப்பின் எங்களது குறிக்கோளாகும்” என்று இலங்கை ஐ.நா.
இன் பெண்கள் அமைப்பின் அலுவலகத் தலைவரான ராமாயா சல்காடோ குறிப்பிட்டார். “உலகளாவிய தரவுகள், பால்நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவரும் சமமாக மதிக்கப்படுகின்ற, சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்ற மற்றும் நியாயமான நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்ற சமூகங்கள், செழித்து காணப்படுவதுடன் மேலும் இந்த இலக்குகளை அடைவதற்கு கூட்டு முயற்சிகள் தேவை என்பதை காட்டுகின்றன" என்று கூறினார்.
සමதீவு அனைத்து வகையான வன்முறை, பாகுபாடு மற்றும் சுரண்டலை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு அணிதிரட்டலுக்கான அழைப்பாக செயற்படுகின்ற அதே நேரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தலைமைத்துவம் மற்றும் தீர்மானமெடுக்கும் இடங்களுக்கான உள்ளடங்கலான அணுகலை உறுதி செய்வதற்கான வலுவூட்டலை வளர்க்கிறது.
இந்த நிறுவலானது மார்ச் 6 முதல் 12 வரை கொழும்பு 07 இல் உள்ள லயனல் வென்ட், கலை மையத்தில் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்.